வெளியீடு தகவல்: தினமலர், வாரமலர், டிசம்பர் 13 , 2009
டிசம்பர் 13 , 2009 இல் தினமலர் பத்திரிக்கையின் வாரமலர் நாளிதழில், தனது எழுத்தவதாரம் தோன்றிய வரலாறை சுவாரசியமாக பகிர்ந்துள்ளார் திரு. லேனா தமிழ்வாணன். அதில், தமிழ் இலக்கிய மாணவர்கள் என்றால் கேலி கூத்தாக கண்ட சமயம்தான் தானும் அதில் சேர்ந்த காலம் என்று கூறுகிறார். மேலும், 1975 ஆம் ஆண்டில், தான் சென்ற சுற்றுலா பயணத்தின் போது அனுபவித்த வேதனையான வலிகளையே, சாதனையின் வழியாக மாற்றி, ஒரு ஆதங்க பதிவை எழுதி, தான் படித்த தஞ்சை பல்கலை கழக பேராசிரியர் ஒருவரிடம் கொடுத்திருக்கிறார். அந்த ஆசிரியர் அதை படித்துவிட்டு தன் நண்பனாகிய லேனா தமிழ்வாணனின் தந்தையிடம், “உங்களுக்கு வாரிசு கிடைத்துவிட்டார்” என்று சொல்லி புகழாரம் சூடியிருக்கிறார்.
அதோடு ‘லட்சுமணன்’ என்ற இயற்பெயரில் தன் தந்தை கல்கண்டு பத்திரிகையில் தன் முதல் மொழிபெயர்ப்பு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இதுவே தனது எழுத்து நடைகளை மெருகேற்றி வாழ்க்கை சார்ந்த பயணக்கட்டுரைகளிலும் தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதுவதிலும் முயற்சிகளை தூண்டியதாகவும் கூறியிருக்கிறார். பின்னாளில் தனது தந்தையின் இழப்பிற்கு பிற்பாடு, லேனா தமிழ்வாணன் செய்த எழுத்து சாதனைகள் எல்லாம் சேர்ந்து அவரை குமுதத்தின் துணை ஆசிரியர் பொறுப்பிலிருந்து, கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியராக அமர்த்தியது.
இந்த பதிப்பு உங்களின் பார்வைக்காக இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது:







Leave a Reply