
வெளியீடு தகவல்: ஏப்ரல், 2015 புதுச்சேரி அகில இந்திய சமூக நல அமைப்பு தன் 16ஆம் ஆண்டு விழாவில் இயக்குனர் திரு.கே. பாக்யராஜ் அவர்களின் திரையுலகப் பணிக்கு பாராட்டு விழாவும், மற்றும் திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: ஜூலை, 2015 உலகம்பட்டி திரு.லெ.நா. லெட்சுமணன் செட்டியார் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பதிப்பு துறையில் பொன்விழா கண்ட திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு சாதனையாளர் விருது, ₹ 5001 மற்றும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

வெளியீடு தகவல்: உதயன், பிப்ரவரி 21, 2014 திரு.லேனா தமிழ்வாணன் 44 ஆண்டு கால பத்திரிக்கை மற்றும் எழுத்து உலக சேவையைப் பாராட்டி அவருடைய அறுபதாவது பிறந்த தின – மணிவிழா அன்று ,மும்பை மராட்டிய மாநில தமிழர் கூட்டமைப்பும் பூனா பாலாஜி கழகமும் இணைந்து “மானுட சிந்தனை மாமேதை” என்ற விருது மற்றும் 3 லட்சத்திற்கான காசோலையும் கவியரசு திரு. வைரமுத்து அவர்கள் மூலம் வழங்கியது.

வெளியீடு தகவல்: குங்குமச் சிமிழ், பிப்ரவரி 1, 1995 குங்குமச் சிமிழ் இதழில் மணிமேகலைப் பிரசுரத்தின் ‘பிரபலமானவர்களின் முகவரிகள்’ நூலின் பெருமையைப் பற்றியும்…அது 1995 வரை மட்டுமே 17 பதிப்புகள் வெளிவந்துள்ளன என்றும்…அந்த நூலுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் அது ஒரு கின்னஸ் சாதனையாக அமைந்துவிடும் என்ற செய்தி அன்றே இடம் பெற்றிருக்கிறது.

வெளியீடு தகவல்: தமிழ்ப்பணி, ஆடி, 2016 பதிப்பகச் செம்மல் மெய்ப்பன் அறக்கட்டளையின் சார்பில் தமிழறிஞர் அரு. சோமசுந்தரன் அவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: மாலைமலர், ஜனவரி 14, 2012 சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி அரங்கில் வார இதழில் ஒரு பக்க கட்டுரைகளை தொடர்ந்து 34 ஆண்டுகள் எழுதி சாதனை படைத்த திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு பூனாவைச் சேர்ந்த பாலாஜி அறக்கட்டளை – சிறந்த எழுத்தாளர் விருதும் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் வழங்கியது.

வெளியீடு தகவல்: மள்ளர் மலர் ஜூன், 1999 முப்பெரும் இலக்கிய விழா-மள்ளரிய விழாவில்திரு.லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு மூவேந்தர் இலக்கிய விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுசிறப்பிக்கப்பட்டார்.

வெளியீடு தகவல்: தினமணி, பிப்ரவரி 21, 2013 தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜனுக்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் விருது வழங்கப்பட்ட விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: புதுகை வரலாறு, டிசம்பர், 2018 புதுக்கோட்டை இலக்கிய பேரவையின் சார்பில் நடைபெற்ற பாராட்டு பட்டமளிப்பு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு எழுத்துச் சிற்பி பட்டமும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.

வெளியீடு தகவல்: புதுகைத் தென்றல், நவம்பர், 2018 திரு.பி.வெங்கட்ராமன் அவர்களுக்கு பொதிகை மின்னல் அமைப்பு வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டார்.