
வெளியீடு தகவல்: விழா அழைப்பிதழ் – பிப்ரவரி, 2017 கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி தின கொண்டாட்டத்தின் போது, திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றி, விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

வெளியீடு தகவல்: தெரியவில்லை – மே, 2014 சிகாகோ தமிழ் சங்கத்தின் 45-வது ஆண்டு விழாவில் தலைமை பேச்சாளராக தமிழ்வாணன் பங்கேற்று, மறுநாள் நடந்த விழாவில் “தமிழ் இனி மெல்ல வாழும்” என்ற தலைப்பில் பேசினார்.

வெளியீடு தகவல்: பல்வேறு பதிப்புகள் சர்வதேச தமிழ் பல்கலைக்கழக “மதிப்புறு முனைவர்” பட்டம் பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு, இந்திய பேனா நண்பர் பேரவை சார்பாக, மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

வெளியீடு தகவல் : ஜுன் 21 எழுத்தாளர், டாக்டர் சஹாநாதனின் 8-வது புத்தகம் வெளியீடு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரை.

வெளியீடு தகவல்: பிப்ரவரி, 2014 ஷியான் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 7-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

வெளியீடு தகவல்: பல்வேறு பதிப்புகள் மலேசியாவில் 90 ஆண்டுகளாக வெளி வரும் ‘தமிழ் நேசன்’ மற்றும் ‘மக்கள் ஓசை’, ‘மலேசிய நண்பன்’, ‘இந்தியன் ஃப்ரண்ட் லைனர்ஸ்’ இணையதளம், ‘தினமலர்’ போன்ற பல்வேறு பதிவுகளில் உலகத் தமிழ் பல்கலைகழகம் சார்பில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட செய்தி வெளியானது.

வெளியீடு தகவல்: ஏப்ரல் 13, 2012. மணிமேகலை பிரசுரத்தின் தமிழ்ப் புத்தக கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு.

வெளியீடு தகவல் : 26, ஏப்ரல்,2017. பத்மஸ்ரீ அவ்வை டி.கே. சண்முகம் அவர்களின் 105 -வது பிறந்தநாள் விழாவில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் நூல் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல் : செப்டெம்பர், 2022 கவியரசு கண்ணதாசன் இலக்கிய சாரல் சார்பில் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கு வழங்கும் கண்ணதாசன் விருது.

வெளியீடு தகவல் : மார்ச், 2016 திண்டுக்கல் சேரன் குளோபல் மெட்ரிக் பள்ளியின் 2 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திரு லேனா தமிழ்வாணன் அவர்கள். கூடுதல் சிறப்பம்சமாகமற்றொரு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு.Er. T.பாண்டியராஜன் MJF..அவர்கள் லேனாவின் பேச்சைக் கேட்கவே வந்தேன் என்று திரு லேனா தமிழ்வாணன் அவர்களை பெருமைப்படுத்தினார்.