
வெளியீடு தகவல்: மார்ச், 2017 இலக்கியப் பீடம் மாத இதழின் 21ஆம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: இலக்கியப் பீடம், ஜூலை, 2017 எழுத்தாளர் பாலசாண்டியன் எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ நூலை திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் வெளியிட்டார்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2022 திரு.சரவணக்குமார் எழுதிய “அச்சம் விட்டு உச்சம் தொட்ட தமிழ்வாணன்”- நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் வாழ்த்துரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஜூன், 1986 விஜிபி சகோதரர்களை வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வழிகாட்டும் வரலாறு எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கினார்.

வெளியீடு தகவல்: ஜூலை, 2016 மணிவாசகர் பதிப்பக நிறுவனர் பதிப்புச் செம்மல் முனைவர் மெய்யப்பனார் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதல் பிரதியைப் பெற்று திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: நவம்பர், 2016 சேலத்தில் வாசகன் பதிப்பகம் வழங்கும் 15 நூல்கள் வெளியீட்டு விழாவில் திரு.லேனா தமிழ்வாணன் சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: தினமணி, ஜனவரி 12, 2020 தினமணி நாளிதழில் புத்தகக் காட்சியில் இன்று… பகுதியில் மணிமேகலைப் பிரசுரத்தின் 43 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என்ற செய்தி வந்துள்ளது.

வெளியீடு தகவல்: ஜனவரி, 2020 அந்துமணி பதில்கள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வெளியீடு தகவல்: புதுகைத் தென்றல், ஜனவரி, 2022 தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய விழாவில் சமுதாயச் சிந்தனைகள் எனும் நூல் வெளியீட்டு விழாவில் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் கலந்து கொண்டார்.

வெளியீடு தகவல்: காவிரிக்கதிர், செப்டம்பர், 2016 எழுத்தாளர் திரு என் சி மோகன்தாஸ் அவர்களின் சிறப்பிதழை அன்புப் பாலம் வெளியிட திரு.லேனா தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார்.